லேபிள்கள்

19.9.14

TNGTF ன் தொடர் கோரிக்கையின் விளைவாக CPS ACCOUNT SLIP தொடக்க கல்வித்துறை ஆசிரியர்களுக்கு கிடைக்கவுள்ளது

            தொடக்க கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு CPS திட்டத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொகைக்கு  முறையாக கணக்கு பராமரிக்க படவில்லை  என்பதை பற்றி தொடர்ந்து நமது அமைப்பு தொடக்க கல்வி இயக்குனரிடம் வலியுறுத்தி வந்தது. அதற்கான ஆதரங்களை இயக்குனரிடம் சமர்பித்தோம் 
     அதன் தொடர்ச்சியாக இயக்குனர் உத்தரவுப்படி சென்னை,டேட்டா சென்டர் மூலம் மாவட்ட  தொடக்க கல்வி அலுவலருக்கு கணக்கீட்டு படிவம் அனுப்ப பட்டு அனைத்து உதவி தொடக்க கல்வி அலுவலர் மூலம் ஆசிரியர்களின் CPS தொகை பதியப்பட்டு சென்னையில் உள்ள டேட்டா சென்டருக்கு  அனுப்ப பட்டது. 

   இருப்பினும் CPS தொகைக்கான ACCOUNT SLIP  நமக்கு கிடைப்பதற்கு காலதாமதம் செய்யப்படுவதை மீண்டும் நமது மாநில நிர்வாகிகள் இயக்குனரின் கவனித்திற்கு கொண்டு சென்றதன் தொடர்ச்சியாக தற்போது

CPS  தொகை பிடித்தம் செய்ததற்கான ACCOUNT SLIP கருவூலம் மூலம் உதவித் தொடக்க கல்வி அலுவலகத்திற்கு விரைவில் வழங்க பட இருக்கிறது என்ற தகவலை நமது பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக