லேபிள்கள்

20.9.14

கடந்த ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பணிநியமனம் பெறாதவர்கள் தொடுத்த வழக்கு - வரும் செவ்வாய் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு ?

கடந்த ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பணிநியமனம் ஆகாமல் மீதம் இருந்த 10000 க்கும் மேற்பட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
இந்த வழக்கின் தீர்ப்பு மூன்று வருடம் கழித்து 2013 ஆம் ஆண்டு ஜீலையில் வெளியானது. அந்த தீர்ப்பில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த அனைவருக்கும் தகுதி தேர்வு எழுத கட்டாயப்படுத்தாமல் அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து பணி நியமணம் செய்யவேண்டும் என அமர்வு அதிரடி தீர்ப்பு கொடுத்துள்ளது.

இதற்கு விளக்கமளித்த சோமையாஜீ தற்பொழுது காலி பணியிடம் இல்லை எனவும், இனி வரும் காலங்களில் காலி பணியிடம் உருவாகும் போது அவர்களை பணியமர்த்துவதாக உறுதி அளித்தார்.

மேலும் மூன்று மாதம் கடந்த பிறகு அரசு சுப்ரீம் கோர்ட்டில் கடந்த அக்டோபர் மாதத்தில் மேல் முறையீடு செய்தது. வாய்தா மேல் வாய்தா வாங்கி கொண்டு வந்த தமிழகஅரசு இம்முறை வாய்தா வாங்க வழி இல்லாமல் முழித்துகொண்டுள்ளது.

ஏனென்றால் வரும் செவ்வாயன்று சுப்ரீம் கோர்ட் அமர்வில் இறுதி முடிவு என்று முதல் ஐட்டமாக வருகிறது. ஏற்கெனவே அமர்வில் கொடுக்கப்பட்ட தீர்ப்பு என்பதால் தீர்ப்பு கொடுப்பது எளிது. மேலும் சுப்ரீம் கோர்ட்டிலும் அரசுக்கு எதிராக தான் அமையும் என நம்பிக்கையுடன் உள்ளனர் பாதிக்கப்பட்டவர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக