பிளஸ் 2 வேதியியல் பாடத்தேர்வு கடினமாக இருந்ததால், சதம்எடுப்பவர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 5ம்தேதி முதல் நடக்கிறது.
கம்ப்யூட்டர் சயின்ஸ், வணிகவியல், உள்ளிட்ட தேர்வுகளும் முடிந்தது. நேற்று நடந்த வேதியியல் தேர்வு ஓரளவு கடினமாகவும், கணக்கு பதிவியல் தேர்வு எளிமையாக இருந்ததாக மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
வேதியியல்:அகல்யா : ஒரு மதிப்பெண் வினா விடையில், ஐந்திற்கும் மேற்பட்ட வினாக்கள் கடினமாகவே இருந்தன. எதிர்பார்த்த வினாக்கள், மிகக் குறைவாகவே இருந்ததுவே முதல் ஏமாற்றமாக இருந்தது. 3 மதிப்பெண் மற்றும் 5 மதிப்பெண் வினாக்களில், 3 மூன்று வினாக்கள் குழப்பமானதாகவே இருந்தன. இதனால், மற்ற வினாக்களுக்கு விடையளிப்பதும் கடினமாக தெரிந்தது. சதம் எடுப்பதற்கான வாய்ப்பு குறைவே.
தண்டீஸ்வரன் : சிறு மற்றும் குறு வினாக்கள், தவிர, 10 மதிப்பெண் வினாக்களும், நேரடியாக இல்லாமல், அதனால் ஏற்படும் விளைவு கருத்தை மையமாகக் கொண்டு கேட்கப்பட்டதால், தெளிவான விடை அறிய கடினமாக இருந்தது. நன்றாக யோசித்து விடையளிக்கக் கூடிய தேர்வாக இருந்தது.ஜெகநாத ஆழ்வார்சாமி, வேதியியல் ஆசிரியர் : மிக நன்றாக படிக்கும் மாணவர்களே இத்தேர்வில் பெரும்பான்மையான வினாக்கள் குழப்பமாக இருந்ததென கூறுகின்றனர்.இதனால், சதம் எடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறையவும் வாய்ப்புள்ளது.
கணக்குபதிவியல்:
தினேஷ்குமார் : திருப்புதல், அரையாண்டு மற்றும் கடந்தாண்டு தேர்வுகளில் கேட்கப்பட்ட வினாக்களே மீண்டும் வந்ததால், எளிமையாகவும், சுலபமாக அனைத்து வினாக்களுக்கும் குறுகிய நேரத்தில் விடையளிக்கக் கூடிய தேர்வாக இருந்தது.
சீலாகஸ்துாரி : கலைப்பிரிவு பாடங்களில் நடந்த தேர்வில், இத்தேர்வு மிகவும் எளிமையானதாக இருந்தது. குழப்பமில்லாத வினாக்களால், அனைத்து வினாக்களுக்கும்விடையளிக்க முடிந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக