லேபிள்கள்

27.3.15

இலவச ஆசிரியர் தகுதி தேர்வுக்கான வகுப்பு : பழங்குடியின மாணவர்களுக்கு அழைப்பு

ஆசிரியர் தகுதி தேர்வுக்கான, இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்க,பழங்குடியினர் பட்டதாரி மாணவ, மாணவியர், தங்களது பெயரைப் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து,
மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
பி.எட். முடித்து, கடந்தாண்டு மார்ச், 31ம் தேதி வரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த, பழங்குடியின பட்டதாரி மாணவர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான இலவசபயிற்சியில் பங்கேற்க வரும், 31ம் தேதி வரை, ஆசிரியர் பயிற்சி மையத்தில்வேலைவாய்ப்பு பதிவு அட்டையுடன் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம்.இதுதொடர்பாக மேலும் தகவல் தெரிந்து கொள்ள. புலிகரையில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் நிறுவன மொபைல்ஃபோன் எண், 73730-03385,73730-03386 தொடர்பு கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக