வரும் 28ம் தேதி, தமிழகத்தில், 'பந்த்' அறிவிக்கப்பட்டுள்ளதால், முதுநிலைஆசிரியர்களுக்கான கலந்தாய்வு தள்ளிப் போகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழக அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்
பள்ளிகளில், 1,789 முதுநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., போட்டித் தேர்வு நடத்தியது.
இதில், தேர்வானவர்களுக்கு பணி வழங்குவதற்கான, இணையம் மூலமான கலந்தாய்வு (ஆன்-லைன் கவுன்சிலிங்), வரும் 28ம் தேதி, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலகங்களில் நடக்கும் என, பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. ஆனால், 28ம் தேதி, தமிழகத்தில் பல அரசியல் கட்சிகள் சார்பில், 'பந்த்' அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்வானவர்கள்கலந்தாய்வுக்கு குறிப்பிட்ட நேரத்தில் வர முடியுமா என, அச்சமடைந்துள்ளனர். எனவே, கலந்தாய்வு தேதியை மாற்றம் செய்ய, பள்ளிக்கல்வித் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக