லேபிள்கள்

25.3.15

ஆசிரியர் தகுதி தேர்வை, இனி சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தின் கீழ் எழுத வேண்டும் என, பள்ளிக்கல்வி இயக்ககம்அதிரடி உத்தரவு .

புதுச்சேரியில் உள்ள நான்கு பிராந்தியங்களிலும் ஆசிரியர் தகுதி தேர்வை, இனி சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தின் கீழ் எழுத வேண்டும் என, பள்ளிக்கல்வி இயக்ககம்அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

மத்திய அரசின் அடிப்படை கல்வி சட்டத்தின்படி, இனி ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி வெற்றிப் பெற்றவர்களே ஆசிரியராக முடியும். 

ஒன்றாம் வகுப்பு முதல் 8ம்வகுப்பு வரை ஆசிரியர்களாக நியமிக்கப்படுவர்கள், அந்தந்த மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற விதியை, தேசிய ஆசிரியர் கல்வி நிறுவனம் வகுத்துள்ளது.புதுச்சேரி மாநிலத்திற்கென தனி கல்வி வாரியம் இல்லை. எனவே, தமிழகம், கேரளா, ஆந்திரா மாநிலங்களின் கல்வி வாரியத்தின் கீழ் ஆசிரியர் கல்வி படித்தவர்கள் தகுதி தேர்வு எழுதி வந்தனர். புதுச்சேரியில் இதுவரை 400 டி.டி.எட்.,பட்டயஆசிரியர்களும், 350 பி.எட்.பட்டதாரி ஆசியர்களும் வெற்றி பெற்று அரசு ஆசிரியர் பணி கனவில் உள்ளனர்.இந்நிலையில், பள்ளி கல்வி இயக்ககம், ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெறுவதற்கான மதிப்பெண்ணில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இனி, நான்கு பிராந்தியங்களிலும், மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., திட்டத்தின் கீழ், (CTET) ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படும் என அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதேபோன்று, ஆசிரியர் தகுதி தேர்வில் உள்ள 180 மதிப்பெண்களில், பொதுப்பிரிவினர்-90 மதிப்பெண், எம்.பி.சி., மீனவர், ஓ.பி.சி., முஸ்லிம் பிரிவினர்-82, எஸ்.சி., எஸ்.டி மற்றும் மாற்றுதிறனாளிகள்-75 மதிப்பெண்கள் எடுத்தால் வெற்றிப்பெற்றதாக கொள்ளப்படும் என அறிவித்துள்ளது.

புதுச்சேரியில் தரமான கல்வியை வழங்குவதற்காக, நான்கு பிராந்தியங்களிலும் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.ஆங்கில மீடியத்தில் ஐந்தாம் வகுப்பு வரையிலும், தமிழ் மீடியத்தில் ஒன்றாம் வகுப்பு வரையிலும் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் காரணமாகவும் புதுச்சேரியில் உள்ள நான்கு பிராந்தியங்களிலும் ஆசிரியர் தகுதி தேர்வினை இனி சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தின் கீழ் எழுத வேண்டும் என, அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திடீர் மாற்றம் ஏன்?

ஏனாமில் ஆசிரியர் கல்வி படித்தவர்கள், ஆந்திர கல்வி வாரியத்தின் கீழ் ஆசிரியர் தகுதி தேர்வினை எழுதி வந்தனர். ஆந்திர அரசு ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தகுதி தேர்வினையே வேலைவாய்ப்பிற்கான தகுதியாக எடுத்துக்கொண்டதால், புதுச்சேரியைச் சேர்ந்த ஏனாம் பகுதியில் ஆசிரியர் கல்வி பயின்ற பட்டதாரிகளை தேர்வு எழுத அனுமதிக்க மறுத்தது.இதனால் தெலுங்குமொழியை தாய்மொழியாக கொண்டு பாடம் படித்த ஆசிரியர் கல்வி பட்டதாரிகள் எங்கும் தகுதி தேர்வு எழுத முடியாத சூழல் ஏற்பட்டது. 

இதேபோல், ஒவ்வொரு மாநிலமும் புதுச்சேரியை கழற்றிவிட்டால் எதிர்காலத்தில் புதுச்சேரி பட்டதாரிகளுக்கு ஆசிரியர் தகுதி தேர்வினை நடத்துவது சிக்கலாகிவிடும் என, கருதி தற்போது ஒரே மாதிரியான தகுதி தேர்வு திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக