* தமிழக அரசின் 2014-2015 கணக்கின்படி தமிழகத்தில் பள்ளிகளின் எண்ணிக்கை:அரசு ஆரம்ப பள்ளிகள் 23928, நடுநிலைப் பள்ளிகள் 7260, உயர்நிலைப்பள்ளிகள் 3044, மேனிலைப் பள்ளிகள் 2727.
* பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை:
ஆரம்ப பள்ளிகளில் 64855, நடுநிலைப் பள்ளிகளில் 50508, உயர்நிலைப் பள்ளிகளில் 27891, மேனிலைப் பள்ளிகளில் 73616 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.மேற்கண்ட பள்ளிகளில் 56,55,628 மாணவ மாணவியர் படிக்கின்றனர்.
* மாவட்ட வாரியாக தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் 25,01483, மாணவியர் 24,67,455 படிக்கின்றனர்.
* மாவட்ட வாரியாக உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள்42,86,450, மாணவியர் 4109752 பேர் படிக்கின்றனர்.ஆசிரியர்களுக்கான பங்களிப்பு ஓய்வு திட்டத்தை முதலில் அறிமுகம் செய்த போது அதை மேற்கு வங்கம், திரிபுரா, கேரளா போன்ற மாநிலங்கள் ஏற்றுக் கொள்ளாமல் அதைசெயல்படுத்தவில்லை. மேற்கண்ட 3 மாநிலத்திலும் அப்போது கம்யூனிஸ்ட் கட்சிதான் ஆட்சியில் இருந்தது. இப்போது காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தாலும் மேற்கண்ட பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டத்தை கொண்டு வரவே இல்லை. ஆனால் தமிழகம் மட்டுமே இந்த பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டத்தை வேண்டும் என்றே கொண்டு வந்து ஆசிரியர்களை பழிவாங்குகிறது. அந்த 3 மாநில அரசுகள் ஆசிரியர் அரசு ஊழியர் நலன் காக்கும் அரசாக இருக்கின்றன. தமிழக அரசு ஆசிரியர்களை வதைப்பதாக உள்ளது என்று ஆசிரியர்கள் புலம்பி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக