லேபிள்கள்

16.6.16

10ம் வகுப்பு மாணவர்களுக்கு சனி, ஞாயிறு சிறப்பு பயிற்சி: வரும் 18ம் தேதி முதல் அமல்

அரசுப்பள்ளிகளை விட பல தனியார் பள்ளிகளில் பயிற்சித்திறன் அதிகமாக உள்ளது. இதற்காக பல்வேறு சிறப்பு பயிற்சிகள்,
வகுப்புகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. அரசுப்பள்ளிகளில் இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் கூட பொதுத்தேர்வு தேர்ச்சியில் அதிக மதிப்பெண்களை தனியார் பள்ளி மாணவர்களே பெறுகின்றனர்.எனவே, அரசு பள்ளிகளில் இந்த நிலையை மாற்ற அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டம் சார்பில் நடப்பாண்டில் சிறப்பு பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதன்படி ஒவ்வொரு அரசுப்பள்ளியில் 10ம் வகுப்புத் தேர்வில் முதல் 3 இடங்களை பெறும் மாணவ, மாணவியர் இத்திட்டத்தின்கீழ் கொண்டு வரப்பட உள்ளனர்.இவர்களை திண்டுக்கல் மாவட்டத்தின் 4 மையங்களில் ஒருங்கிணைத்து ஒவ்வொரு சனி, ஞாயிறும் இவர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து உதவி மாவட்டத்திட்ட ஒருங்கிணைப்பாளர் சேசுராஜாபயஸ் கூறுகையில், 'திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 160 பள்ளிகளிலும் தலா 3 மாணவ, மாணவியர் தேர்வு செய்து இதற்காக பயிற்சி அளிக்கப்பட உள்ளது. ஒவ்வொரு மையத்திலும் 50 பேருக்கு பயிற்சி அளிக்கப்படும். தமிழகமெங்கும் இதற்கான பயிற்சி மையங்கள் துவங்கப்பட உள்ளன. இந்த மையங்களில் சிறப்பு ஆசிரியர்களை கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இதற்காக ஆசிரியர்களுக்கு உழைப்பூதியம், மாணவர்களுக்கு பயணப்படியும் வழங்கப்படும். மேலும் மாணவர்களுக்கு வினாவங்கி இலவசமாக வழங்கப்படுவதுடன், முழுப்பாடத்திற்கும் இரண்டு தேர்வு நடத்தப்படும். வரும் 18ம் தேதி முதல் இத்திட்டம் துவங்க உள்ளது' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக