லேபிள்கள்

12.6.16

தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான பட்டயத் தேர்வு: தத்கால் மூலம் விண்ணப்பிக்கலாம்

தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான பட்டயத் தேர்வுக்கு தனித் தேர்வர்களாக தேர்வெழுத விண்ணப்பிக்கத் தவறியவர்கள்,
சிறப்பு அனுமதித் திட்டத்தின் (தத்கால்) மூலம் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பு: ஜூன் 2016-இல் நடைபெறவுள்ள தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான பட்டயத் தேர்வுகள், வரும் 30-ஆம் தேதி தொடங்கி, ஜூலை 16-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. தனித் தேர்வர்களாக முதலாமாண்டு, இரண்டாமாண்டு தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வெழுத நிர்ணயிக்கப்பட்ட கடைசித் தேதியான மே 14-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கத் தவறியவர்களுக்கு, தற்போது சிறப்பு அனுமதி திட்டத்தின் (தத்கால்) கீழ் விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படுகிறது. சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் தேர்வெழுத விரும்பும் தனித்தேர்வர்கள், தாங்கள் வசிக்கும் மாவட்டத்துக்கு அருகில் அமைந்துள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவனத்துக்கு ஜூன் 15 (புதன்கிழமை), ஜூன் 16 (வியாழக்கிழமை) ஆகிய இரு நாள்களில் சென்று, புகைப்படத்துடன் பதிவு செய்து கொண்டு அதே இடத்தில் தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். தேர்வுக் கட்டண விவரம்: ஒவ்வொரு பாடத்துக்கும் தலா ரூ.50 பதிவுக் கட்டணம் ரூ.10 மதிப்பெண் சான்றிதழ் (முதலாம் ஆண்டு) ரூ.100 மதிப்பெண் சான்றிதழ் (இரண்டாமாண்டு) ரூ.100 சிறப்பு அனுமதி கட்டணம் ரூ.1,000 சேவைக் கட்டணம் ரூ.5 ஆன்லைன் பதிவுக் கட்டணம் ரூ.50 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் வியாழக்கிழமை (ஜூன் 16) மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் தேர்வர்களுக்கு, தேர்வுக் கூட அனுமதிச் சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாள்கள் குறித்து பினனர் அறிவிக்கப்படும். மேலும், தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக