பீகாரில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் முறைகேடு தொடர்பாக, பிஷன் ராய் கல்லூரி செயலாளர் மற்றும் தலைமை ஆசிரியரான
பச்சா ராய் என அழைக்கப்படும் அமித்குமாரை வைசாலி மாவட்டதில் உள்ள பகவான்பூர் போலீசார் கைது செய்தனர்.பீகாரில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் முறைகேடு தொடர்பாக, பிஷன் ராய் கல்லூரி செயலாளர் மற்றும் தலைமை ஆசிரியரான பச்சா ராய் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக பாட்னா மூத்த போலீஸ் அதிகாரி மானு மகராஜ், முக்கிய குற்றவாளிகளான லால்கேஷ்வர் மற்றும் பச்சா ராய் இருவரையும் கைது செய்துவிடுவோம் என கூறியிருந்தார். பீகாரில் பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர்கள், தங்கள் எழுதிய பாடத்தின் பெயரைக் கூட ஒழுங்காக சொல்லத் தெரியாதது, என பின்னர் வெளி உலகுக்கு தெரிய வந்தது. இதையடுத்து பிளஸ் 2 தேர்வில் முறைகேடு செய்து முதல் மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. முதல் மதிப்பெண் எடுத்தவர்களில் பிஷன் கரமகளின் பெயரும், முறைகேடு செய்து முதலிடம் பிடித்தவர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில், முறைகேடு நடந்த கல்லூரியின் தலைமை ஆசிரியர் தலைமறைவாக இருந்த நிலையில், இன்று வைஷாலி மாவட்டத்தில் உள்ள பக்வான்புர் காவல்நிலையத்தில் சரண் அடைய வந்தவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடைப்பெற்று வருகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக