விண்ணப்பத்தில், ஜாதி பெயரை குறிப்பிட விரும்பவில்லை என்றால், அவர்களை
கட்டாயப்படுத்த முடியாது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
சென்னை, வில்லிவாக்கத்தைச் சேர்ந்த எழுத்தாளர் பாலகிருஷ்ணன் தாக்கல் செய்த மனு:

சமூக நீதிக்கு முன்னோடிமாநிலமான தமிழகத்தில், 1973 ஜூலை, 2ம் தேதி பிறப்பிக்கப்பட்ட அரசாணையில், 'பள்ளிகளில், மாணவர் சேர்க்கையின் போது, ஜாதி, மதத்தை குறிப்பிட விரும் பாதவர்களிடம், அதை தெரிவிக்கும்படி வற்புறுத்த வேண்டாம்; மாற்றுச் சான்றிதழ்களில் ஜாதி, மதங்களை குறிப்பிட வேண்டாம்' என, கூறப்பட்டுள்ளது.இதன்பின், 2000 ஜூலை, 31ம் தேதி, இந்தஅரசாணையை அமல்படுத்துவது சம்பந்தமாக, மற்றொரு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இருந்தும், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், மாணவர் சேர்க்கையின் போது, ஜாதி, மதத்தை குறிப்பிடும்படிநிர்பந்திக்கின்றனர்.இடஒதுக்கீடு சலுகை களை பெற விரும்புவோரிடம் மட்டும், ஜாதிச் சான்றிதழ்களை பெறலாம்;மற்றவர்களிடம் இந்த விவரங்களை பெற அவசிய மில்லை. எனவே,'பள்ளி மாற்றுச் சான்றிதழ் களில், ஜாதி, மதத்தை குறிப்பிடக் கூடாது' என, உத்தரவிட வேண்டும். இது தொடர்பான அர சாணையை அமல் படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இம் மனுவை விசாரித்த, தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல், நீதிபதி மகாதேவன் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:ஜாதியற்ற சமூகம் வர வேண்டும் என்றநோக்கத்துக்காக, 2, 000 ஜூலை யில், பள்ளிக்கல்வித் துறை அரசாணை பிறப்பித்தது.அந்த அரசாணையை பின்பற்ற வேண்டிய தேவை யை, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வலியுறுத்து கிறார்.
மனுதாரர் வழக்கறிஞர் வாதத்தில், நாங்கள் உடன்படுகிறோம். இந்த அரசாணை குறித்து விரிவான விளம்பரம் செய்ய வேண்டும். அப்போது தான், ஜாதி, மதம் பற்றி தெரிவிக்க விரும் பாதவர்களை, கட்டாயப்படுத்த மாட்டார்கள்.மாற்றுச்சான்றிதழை பொறுத்தவரை, 'ஜாதி பெயரை தெரிவிக்கக் கூடாது' என, நாங்கள் சட்டப்படி உத்தரவு பிறப்பிக்க முடியாது. ஏனென்றால், சிலர் அதை தெரிவிக்க விரும்ப லாம்.இருந்தாலும், யாராவது தங்கள் ஜாதி பெயரை தெரிவிக்க விரும்பவில்லை என்றால், அதை தெரிவிக்க வேண்டும் எனக்கூறதேவை யில்லை.
இவ்வாறு, 'முதல் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக