லேபிள்கள்

16.6.16

பிளஸ் 2 துணை தேர்வுக்கு இன்று முதல் 'ஹால் டிக்கெட்'

பிளஸ் 2 துணைத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள்,இன்று முதல், 'ஹால் டிக்கெட்'களை பதிவிறக்கம் செய்யலாம்.
இதுகுறித்து, தேர்வுத் துறை இயக்குனர், நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பிளஸ் 2 உடனடி தேர்வுக்கு, 'தத்கல்' உட்பட அனைத்து வழியிலும், விண்ணப்பித்தவர்கள் இன்று முதல், தங்கள், 'ஹால் டிக்கெட்'களை, www.tngdc.gov.in இணையதளத்தில், வரும் 18ம் தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம். 'ஹால் டிக்கெட்' இல்லாதவர்களுக்கு, தேர்வு எழுத அனுமதி இல்லை. விண்ணப்பதாரர்கள், தங்களின் மார்ச் மாத பொதுத்தேர்வுக்கான பதிவு எண் மற்றும் பிறந்த தேதி மூலம், 'ஹால் டிக்கெட்'டை பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக