மகளை சேர்க்க மறுத்து அலைக்கழித்ததால் தண்டராம்பட்டு அரசு பள்ளி தலைமை ஆசிரியை அறை முன் மாணவியுடன்
தாய் திடீர் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த ராதாபுரத்தை சேர்ந்தவர் உசேன், பெங்களூரில் வேலை செய்து வருகிறார். இவரது மகள் தபானா(17). அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9 முதல் 11ம் வகுப்பு வரை படித்துள்ளார். கடந்தாண்டு 12ம் வகுப்பிற்கு சென்றபோது, தபானாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் தலைமை ஆசிரியை மாதவி, சிகிச்சை பெற்று நோய் குணமான பிறகு பள்ளிக்கு வருமாறு கூறியுள்ளார். அதன்படி, சிகிச்சை முடிந்து கடந்தாண்டு காலாண்டு தேர்வுக்கு பிறகு தபானா 12ம் வகுப்பில் மீண்டும் சேருவதற்காக பெற்றோருடன் வந்துள்ளார். அப்போது, அவரை ஆசிரியர்கள் பள்ளியில் சேர்க்காமல் அலைக்கழித்துள்ளனர். இதனால் கடந்தாண்டு தபானாவால் பள்ளி படிப்பை தொடரமுடியவில்லை. இந்நிலையில், தபானாவுடன் அவரது தாய் கையர்பம்பீ நேற்று காலை பள்ளிக்கு வந்தார். தலைமை ஆசிரியை மாதவியை சந்தித்து மகளை 12ம் வகுப்பில் சேர்த்துகொள்ளுமாறு கூறியுள்ளார். அதற்கு அவர் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கையர்பம்பீ மகளுடன், தலைமை ஆசிரியை அலுவலக அறை முன் திடீர் தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். மகளுக்கு நியாயம் கிடைக்கும்வரை இங்கிருந்து நகர மாட்டோம் என்று கூறியுள்ளார். தகவல் அறிந்து தண்டராம்பட்டு போலீசார் மற்றும் ஊராட்சி தலைவர் மணிமேகலை ரத்னவேல் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, மாணவி தபானாவை மீண்டும் பள்ளியில் சேர்ப்பதாக தலைமை ஆசிரியை மாதவி உறுதியளித்தார். அதன்படி மாணவி விண்ணப்பம் எழுதிகொடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக