,: பிளஸ் 2 பொதுத் தேர்வு மறு கூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன.
பிளஸ் 2 பொதுத் தேர்வை, 8.33 லட்சம் பேர் எழுதினர். அவர்களில், ஒரு லட்சத்து, 751 பேர் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தனர். அவர்களில், 3,344 பேர் மறு கூட்டல் கோரி விண்ணப்பித்தனர்; 3,422 பேர் மறுமதிப்பீடுக்கு விண்ணப்பித்தனர். இதில், மதிப்பெண் மாற்றம் உள்ளவர்களின் தேர்வு பதிவெண் பட்டியல், இன்று வெளியாகிறது. மாணவர்கள், scan.tndge.in என்ற இணையதளத்தில், இன்று காலை, 11:00 மணிக்கு மேல், தங்கள் பதிவெண் விவரங்களை அறிந்து கொள்ளலாம். மதிப்பெண் மாற்றம் குறித்து, வரும், 20ம் தேதி அசல் சான்றிதழ் பெறும் போது அறிந்து கொள்ளலாம். பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதியவர்களுக்கு, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மே, 19ம் தேதி, 'ஆன்லைனிலும்' 21ம் தேதி பள்ளிகள் மூலமும் வழங்கப்பட்டது. தற்போது, அசல் மதிப்பெண் சான்றிதழ்கள், வரும், 20ம் தேதி, அந்தந்த பள்ளிகள் மற்றும் தேர்வு மையங்களில் வழங்கப்படும் என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக