லேபிள்கள்

15.6.16

10ம் வகுப்பு செய்முறை தேர்வு: தேர்ச்சி பெறாதோருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு

பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் செய்முறை தேர்வில் தேர்ச்சி பெறாதோர், மீண்டும் செய்முறை தேர்வு எழுதலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மார்ச் 2016ல் நடந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுதி, அறிவியல் பாட செய்முறைத் தேர்வில் தேர்ச்சி பெறாதோர், அறிவியல் பாட பயிற்சி வகுப்பிற்கு 80 சதவீதம் வருகை புரிந்து, செய்முறைத்தேர்வில் கலந்து கொள்ள தவறிய மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் மீண்டும் செய்முறை தேர்வில் கலந்து கொள்ளலாம்.ஜூன் / ஜூலை 2016 சிறப்பு துணைத்தேர்வின் அறிவியல் பாட செய்முறைத் தேர்வு ஜூன் 20 மற்றும் ஜூன் 21 ஆகிய இரு நாட்களில் நடக்கவுள்ளது. இத்தேர்வில் மேற்கண்ட பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் கலந்துகொள்ளலாம். இதுகுறித்த முழு விவரங்களையும் சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலகத்தை நேரில் அணுகி பெற்றுக் கொள்ளலாம். இத்தேர்விற்கு தனிப்பட்ட முறையில் தேர்வர்களின் வீட்டு முகவரிக்கு அறிவிப்பு ஏதும் அனுப்பப்பட மாட்டாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக