லேபிள்கள்

18.6.16

ஆசிரியர்கள் இருக்கிறார்கள்; மாணவர்கள்தான் இல்லை.

அருப்புக்கோட்டை அருகே ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் பயின்ற 6 மாணவர்கள் மாற்று பள்ளிக்கு சென்றதால், ஆசிரியர்கள் இருந்தும் மாணவர்கள் இல்லாது பள்ளி வெறிச்சோடி
காணப்படுகிறது. அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தது சிதம்பராபுரம். இங்கு துவக்கப் பள்ளி 1927 ல் துவங்கப்பட்டது. சிதம்பராபுரம், ராமலிங்காபுரம் ஊர்களை சேர்ந்த 300 க்கு மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் படித்து வந்தனர். நாளடைவில் இங்கு மாணவர்கள் எண்ணிக்கை குறைந்தது. ராமலிங்கபுரத்தை சேர்ந்த 6 மாணவர்கள் இருந்தனர். அவர்களையும் பெற்றோர் ராமநாயக்கன் பட்டி தனியார் பள்ளியில் சேர்த்து விட்டனர். தற்போது கடந்த ஒரு வாரமாக இப்பள்ளிக்கு மாணவர்கள் வரவில்லை. சேர்க்கையும் இல்லை. பள்ளியில் தலைமை ஆசிரியர், உதவி ஆசிரியர் உள்ளனர். உதவி ஆசிரியரும் மாற்று பணிக்கு சென்றதால், தலைமை ஆசிரியர் மட்டும் உள்ளார். பள்ளியில் கட்டடம், கழிப்பறை, குடிநீர், விளையாட்டு உபகரணங்கள், சத்துணவு கூடம் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. அறிவுறுத்தல் கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் கருப்பசாமி ,“ இரு ஊர் மக்களிடம் பேசி, மாணவர்களை இப்பள்ளியில் சேர்க்க அறிவுறுத்தினோம். சரி என்றவர்கள், தனியார் பள்ளியில் சேர்த்து விட்டனர். மாணவர் சேர்க்கை இல்லையெனில், மேல் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக