லேபிள்கள்

18.6.16

Revaluvation பிளஸ்-2 தேர்வு ...2,300 பேருக்கு மதிப்பெண் அதிகரிப்பு

பிளஸ்-2 தேர்வு:
2,300 பேருக்கு மதிப்பெண் அதிகரிப்பு:
கடந்த மார்ச் மாதம் 4-ந் தேதி முதல் ஏப்ரல் 1-ந் தேதிவரை பிளஸ்-2 தேர்வு நடைபெற்று, முடிவுகள் வெளியிடப்பட்டது. தேர்வில் அதிக மதிப்பெண் வரும் என்று எதிர்பார்த்தவர்கள் முடிவில் எதிர்பார்த்த மதிப்பெண் இல்லாதாதால் ஏமாற்றம் அடைந்தனர். 

அவர்களில் 3,378 பேர் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்தனர். மறு கூட்டலுக்கு 2 ஆயிரத்து 707 பேர் விண்ணப்பித்தனர். 

ஆசிரியர்களின் குளறுபடி

மறுமதிப்பீட்டில் 2,200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு மதிப்பெண் மாற்றம் இருந்தது. ஏராளமான மாணவ-மாணவிகளுக்கு மதிப்பெண் கூடுதலாக வந்துள்ளது. 5 முதல் 10 மதிப்பெண் அதிகமாக வந்துள்ளது. 


சில பக்கங்கள் மதிப்பீடு செய்யாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மறுகூட்டலில் 56 பேருக்கு மதிப்பெண் அதிகரித்துள்ளது. 


குறிப்பாக ஒரு மாணவருக்கு 186 மதிப்பெண்ணுக்கு பதிலாக 86 மதிப்பெண் என்று போடப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் மதிப்பீடு செய்ததில் பல குளறுபடிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் 2 ஆயிரத்து 300 பேருக்கு மதிப்பெண் அதிகரித்துள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக