லேபிள்கள்

15.6.16

அண்ணா பல்கலைக்கழகத்தின் வெப்சைட்டில் இன்ஜினியரிங் தர பட்டியல் வெளியிட வழக்கு

கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரத்தைச் சேர்ந்த வக்கீல் வைரம் சந்தோஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:பிளஸ் 2
முடித்த மாணவர்கள், நல்ல தரமான இன்ஜினியரிங் கல்லூரியை தேர்வு செய்ய வேண்டியுள்ளது. இதனால், இன்ஜினியரிங் கல்லூரிகளின் கல்வித்திறன், தேர்ச்சி விகிதம், தரப்பட்டியல் ஆகியவற்றை அண்ணா பல்கலைக்கழகத்தின் வெப்சைட்டில் வெளியிட்டால் மாணவர்களுக்கு பலனளிக்கும். ஐகோர்ட் உத்தரவின்படி, கடந்த ஆண்டு வெப்சைட்டில் வெளியிடப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு இன்னும் வெளியிடப்படவில்லை. அண்ணா பல்கலைக்கழகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மாணவர்கள் கல்லூரிகளை தேர்வு செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. நீதிமன்றம் தலையிட்டு இன்ஜினியரிங் கல்லூரிகளின் தேர்ச்சி விகிதம் மற்றும் தரப்பட்டியலை அண்ணா பல்கலையின் வெப்சைட்டில் வெளியிட உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் நூட்டி.ராமமோகனராவ், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர், மனு மீதான விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளி வைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக