மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்
கூறியிருப்பதாவது:–பிளஸ்–2 முடித்த மாணவர்கள் உள்ளிட்டோர் இடை நிலை ஆசிரியர் பயிற்சியில் சேர விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை சமர்ப்பிக்க 10–ந் தேதி கடைசி நாள் என்று நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.மாணவர்கள் நலன் கருதி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை சமர்பிக்கும் தேதி வருகிற 17–ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 17–ந் தேதி வரை அனைத்து மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் விண்ணப்பங்களும் வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக