தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு சனிக்கிழமை நிறைவுபெற்றது.
இதில், 20 அரசு மருத்துவக் கல்லூரிகள், சென்னை கே.கே.நகர் இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லூரி, கோவை இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 2,383 அரசு எம்.பி.பி.எஸ். இடங்களும் நிரம்பின. சென்னை பாரிமுனை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 7 அரசு இடங்கள் மீதம் உள்ளன. 2016-17-ஆம் கல்வியாண்டில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் சேருவதற்கான முதற்கட்ட கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் ஜூன் 20-இல் தொடங்கி, 25-ஆம் தேதி வரை நடைபெற்றது. இறுதி நாளான சனிக்கிழமை நடைபெற்ற கலந்தாய்வில் மீதம் இருந்த 267 அரசு எம்.பி.பி.எஸ். இடங்களும், சுயநிதி கல்லூரிகளில் 60 அரசு ஒதுக்கீட்டு இடங்களும், 16 அரசு பி.டி.எஸ். இடங்களும் என மொத்தம் 343 இடங்கள் நிரம்பின. முதற்கட்ட கலந்தாய்வின் முடிவில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் அனைத்துப் பிரிவினருக்கும் உள்ள 2,383 இடங்களும் பூர்த்தியாகின. அரசு பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள 85 இடங்களில் 78 இடங்கள் நிரம்பி மீதம் 7 இடங்கள் காலியாக உள்ளன. சுயநிதிக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களைப் பொருத்தவரை, 72 எம்.பி.பி.எஸ். இடங்களும், 970 பல் மருத்துவ இடங்களும் மீதம் உள்ளன. 2-ஆம் கட்ட கலந்தாய்வு எப்போது? நாடு முழுவதும் 2-ஆம் கட்ட தேசிய தகுதிகாண் தேர்வு (நீட்) ஜூலை 24-இல் நடைபெறவுள்ளது. இதனால், தமிழகத்தில் மீதம் உள்ள சுயநிதி எம்.பி.பி.எஸ் இடங்கள், பல் மருத்துவ இடங்கள் ஆகியவற்றுக்கான 2-ஆம் கட்ட கலந்தாய்வு நீட் தேர்வு நடைபெற்று முடிந்த பின்பே தொடங்கும். எனவே, ஜூலை இறுதி வாரத்தில் 2-ஆம் கட்ட கலந்தாய்வு நடைபெற வாய்ப்புள்ளது என்று தேர்வுக் குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக