லேபிள்கள்

1.7.16

இனி 5 ஆம் வகுப்பு வரை மட்டுமே கட்டாயத் தேர்ச்சி:வரைவு கல்விக் கொள்கையை வெளியிட்டது மத்திய அரசு

அனைவரும் கட்டாயத் தேர்ச்சி திட்டம் இனி ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே செயல்படுத்தப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு ஆணையம் வெளியிட்ட புதிய கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது கட்டாயத் தேர்ச்சி திட்டம் எட்டாம் வகுப்பு வரை செயல்படுத்தப்படுகிறது. எட்டாம் வகுப்பு வரை தேர்ச்சி பெறச் செய்வதால் மாணவர்களின் கல்வித் திறன் பாதிக்கப்படுகிறது. இதனால் இந்த மாற்றம் செய்யப்பட உள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பல்வேறு பரிந்துரைகள் அடங்கிய வரைவு கல்விக் கொள்கையின் ஒரு பகுதியை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. பொதுமக்கள், கல்வியாளர்களின் கருத்துக்களைக் கேட்பதற்காக இந்த வரைவு கொள்கையின் ஒரு பகுதி தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அவ்வாறு கருத்துக்கள், யோசனைகளை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு அனுப்ப ஜூலை 31 கடைசி தேதியாகும். இந்த விவரம் ஜ்ஜ்ஜ்.ம்ட்ழ்க்.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் இடம்பெற்றுள்ளது.

வரைவு கல்விக் கொள்கையில்

இடம்பெற்றிருக்கும் முக்கிய அம்சங்கள்:

* கல்வித் தரத்தைப் பாதுகாக்க இனி ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே கட்டாயத் தேர்ச்சி.

* பள்ளிகளின் தரத்தை நிர்ணயம் செய்ய புதியத் திட்டம் உருவாக்குதல்.

* பள்ளிகளுக்கு, பள்ளி வாரியங்கள் அங்கீகாரம் அளிக்கும்

நடைமுறையைக் கொண்டுவருதல்.

* உயர்கல்வி தரத்தை மேம்படுத்தும் வகையில்

புதிய கல்வி ஆணையம் உருவாக்குவது.

* பள்ளிக் கல்வி, உயர் கல்வி புகார்களுக்கு உரிய தீர்வு காணும் வகையில் தனி கல்வி தீர்ப்பாயங்களை உருவாக்குவது.

* பல்கலைக்கழகங்கள் தரமான நிர்வாகத்தை அளிக்கும் வகையில் அவற்றுக்கு கீழ் இணைப்புப் பெறும் கல்லூரிகளின்

எண்ணிக்கையை அதிகபட்சம் 100-ஆகக் குறைப்பது.

* உயர் கல்வி நிறுவனங்கள் தொடர்ச்சியாகக்

கண்காணிக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில்

மாநில உயர்கல்வி கவுன்சில்களை உருவாக்குவது.

* சர்வதேச தரத்திலான உயர் கல்வியை இந்திய மாணவர்கள் பெறும் வகையில் 200 தலைசிறந்த வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுக்கு இந்தியாவில் கல்வி நிறுவனங்களைத் தொடங்க அனுமதிப்பது.

* வெளிநாடுகளில் கல்வி வளாகங்களைத் தொடங்க இந்திய

கல்வி நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்குவது என்பன

உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் தாங்கள் விரும்பினால், 5-ஆம் வகுப்புவரை தாய் மொழி அல்லது பிராந்திய மொழியை பயிற்று மொழியாகக் கொண்டு, பாடங்களை கற்பிக்கலாம். அப்படி செய்தால், இரண்டாவது மொழி ஆங்கிலமாக இருக்கும். மூன்றாவது மொழியை, அரசியல் சட்டத்துக்குட்பட்டு, மாநில அரசுகள் தேர்வு செய்யலாம். பள்ளி, பல்கலைக்கழக அளவில் சம்ஸ்கிருதம் கற்பிப்பதற்கான வாய்ப்பு பரவலாக்கப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக