லேபிள்கள்

30.6.16

குரூப் - 2 ஏ' தேர்வர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்திய, 'குரூப் - 2 ஏ' பிரிவு தேர்வில் தேர்வானவர்களுக்கு, அடுத்த மாதம், 4ம் தேதி முதல் சான்றிதழ்
சரிபார்ப்பு நடக்க உள்ளது. தமிழக அரசு துறையில், குரூப் - 2 ஏ பிரிவில், நேர்முக தேர்வு அல்லாத பணிகளில், 1,676 காலியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது.
ஜன., 24ல் நடந்த தேர்வில், 6.54 லட்சம் பேர் பங்கேற்றனர். இதன் முடிவுகள், ஜூன் 8ல் வெளியிடப்பட்டன. இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., செயலர் விஜயகுமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தேர்வர்களின் மதிப்பெண் மற்றும் தரவரிசை, www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன. தேர்வானவர்களுக்கு, ஜூலை 4ம் தேதி முதல், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும். பின், தரவரிசை, காலியிடம் மற்றும் இடஒதுக்கீட்டு விதியின்படி, கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவர். சான்றிதழ் சரிபார்ப்பு அழைப்பு கடிதம், தபாலில் அனுப்பப்பட்டு உள்ளது. இணையதளத்திலும், அழைப்பு கடிதத்தை பதிவிறக்கம் செய்யலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக