மதுரை காமராஜ் பல்கலையில் ஏப்ரலில் நடந்த பருவமுறை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. ஜூலையில் உடனடி தேர்வு நடக்கிறது.தேர்வாணையர் விஜயன் அறிக்கை:
இளநிலை மற்றும் முதுநிலை தேர்வு முடிவுகளை www.mkuniversity.org இணையதளத்தில் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம். மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிப்போர் மதிப்பெண் பட்டியலுக்கு காத்திருக்காமல், அதற்கான விண்ணப்பத்தை இணையதளத்தில் பெற்று 8.7.2016 க்குள் தேர்வாணையர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் (www.onlinesbi.com) மட்டுமே செலுத்த வேண்டும். தாமதவிண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது.
உடனடி தேர்வு : ஐந்தாவது பருவமுறை வரை அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்று, ஆறாவது (ஏப்., 2016) பருவமுறையில் தோல்வி அடைந்த மாணவர்கள் நலன் கருதி, ஜூலையில் உடனடி தேர்வு நடக்க உள்ளது. இதற்கான விபரங்களும் இணையதளத்தில் உள்ளன. 8.7.2016க்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக