சென்னை: அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணியாற்ற ஆசிரியர்கள் கட்டாயமாக லைசென்ஸ் பெற வேண்டும்.
மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் கடந்த ஆண்டு புதிய கல்விக் கொள்கையை உருவாக்க சுப்பிரமணியன் தலைமையில் ஒரு கமிட்டியை அமைத்தது. இந்த கமிட்டி எப்போது யாரிடம் கருத்து கேட்டது என்பது குறித்த எந்த செய்தியுமே வெளியில் வராத நிலையில், டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் தலைமையிலான குழு மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. ஆனால் இந்த அறிக்கையை மத்திய அரசு வெளியிட மறுக்கிறது. இந்நிலையில் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய பரிந்துரைகள் குறித்த விவரம் தற்போது வெளியில் கசிந்துள்ளது. அந்த பரிந்துரையில் மாநில அரசுகளின் உரிமையில் தலையிடும் போக்கு, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் உரிமைகளில் தலையிடுவது போன்ற பல்ேவறு விஷயங்கள் இருப்பதால், அதற்கு அனைத்து தரப்பினர் மத்தியிலும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இது குறித்து பொதுப் பள்ளிக்கான மாநில மேடை என்ற அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறியதாவது: டி.ஆர்.எஸ்.சுப்பிரமணியன் கமிட்டியில் 4 பேர் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் உயர் அலுவலர்கள். ஒருவர் மட்டுமே கல்வியாளர். மத்திய மனித வள மேம்பாட்டுத் துறைக்கு இந்த கமிட்டி அளித்துள்ள அறிக்கையை ஆராயும் போது, பல அம்சங்கள் மாநில அரசுகளை அதிகாரத்தில் தலையிடுவதாக உள்ளது. „ அகில இந்திய தகுதித் தேர்வு(UPSE), கல்வி நிர்வாகப் பணிக்கு வருவோருக்கு இந்திய கல்வி பணித் தேர்வு(IES) வைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதன்படி மாநில அரசுகள் கல்வித்துறை இயக்குநர்களை நேரடியாக நியமிக்க முடியாது. „ பிளஸ் 2 முடித்தவர்கள் பின்னர் தேசிய அளவிலான தகுதித் தேர்வு எழுத வேண்டும் என்று கமிட்டியின் அறிக்கை கூறுகிறது. இதன் மூலம் பாடத்திட்டத்தை மாநில அரசுகள் திட்டமிட முடியாத நிலை ஏற்படுகிறது.
„ பல்கலை மற்றும் கல்லூரிகளில் நடத்தப்படும் தேர்வுகள் தள்ளிப் போவதற்கு காரணம்.
6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு படிப்போர் ஒரு முறை தேர்வில் தோல்வி அடைந்தால் அவர்களுக்கு 2 வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். அதிலும் தேர்ச்சி பெறவில்லை என்றால் அவர்களை தொழில் கல்வியோ பயிற்சியோ பெற அனுப்ப வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. „ பி.எட் பட்டம் பெற விரும்புவோர் இளநிலை பட்டத்தில் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். அதற்கு ஆசிரியர் பணி நியமனத்துக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத வேண்டும்.
„ அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆசிரியர்கள் கட்டாயமாக லைசென்ஸ் அல்லது சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்ற விதியை உருவாக்க வேண்டும். மேலும் ஒவ்வொரு 10 ஆண்டுக்கு பிறகு மேற்கண்ட ஆசிரியர்கள் தேர்வு எழுதி தங்கள் லைசென்சை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்ற விதியையும் உருவாக்க வேண்டும்.
„ஏற்கெனவே பணியில் உள்ள ஆசிரியர்கள் ஒவ்வொரு 5 ஆண்டுக்கு ஒரு முறை கட்டாயமாக பயிற்சி பெற வேண்டும். இவை போல பல்வேறு ஆபத்துகளை உள்ளடக்கிய இந்த பரிந்துரைகள் பொதுமக்களின் கவனத்துக் கொண்டு வரப்பட்டு கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள்,பெற்றோர் கூட்டமைப்பினர் என பலரிடம் கருத்து பெறப்பட வேண்டும். அதற்கு பிறகுதான் கல்விக் கொள்கைக்கான வரைவு தயார் செய்யப்பட வேண்டும். எனவே தமிழக அரசு தனது கருத்தை மத்திய அரசுக்கு தெரிவிப்பதற்கு முன்னதாக தமிழக மக்களின் கருத்தையும் கேட்டுப் பெற வேண்டும். தேசிய கல்விக் கொள்கை உருவாக்கும் முறையில் வெளிப்படைத் தன்மையோடும், ஜனநாயக போக்கிலும் நடந்து கொள்ள வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு பிரின்ஸ் கஜேந்திர பாபு தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக