மத்திய இடைநிலை பாடத்திட்ட வாரியமான சி.பி.எஸ்.இ.,யின் அங்கீகாரம் பெறுவதற்கு, பள்ளிகள் விண்ணப்பிப்பதற்கான
காலக்கெடு, நாளையுடன் முடிகிறது.தனியார் மெட்ரிக் பள்ளிகள், சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தை பின்பற்றுகின்றன.
ஆனால், சமச்சீர்க் கல்வி பாடத்திட்டத்தில், 10 ஆண்டுகளாக பாடத்திட்டம் மாற்றப்படாமல் பழமையாக உள்ளதால், மாணவர்கள், அகில இந்திய போட்டித்தேர்வுக்கு தயாராக முடியாத சூழல் உள்ளது. மேலும், மருத்துவப் படிப்புக்கான, 'நீட்' தேர்வு, அடுத்த ஆண்டு முதல் கட்டாயம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே, பல பள்ளிகள், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்துக்கு மாறி வருகின்றன. இந்நிலையில், சி.பி.எஸ்.இ., அங்கீகாரத்தில் பள்ளிகளை நடத்த, சி.பி.எஸ்.இ., இணைப்பு பெற வேண்டும். இதற்கு, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, நாளையுடன் முடிகிறது. இதற்கிடையில், இந்த பள்ளிகளுக்கு, தமிழக அரசின் தடையில்லா சான்று கிடைப்பதில் பிரச்னை உள்ளதாக, தனியார் பள்ளி நிர்வாகிகள் புகார் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக