லேபிள்கள்

1.7.16

பத்தாம் வகுப்புத் தேர்வில்:மதிப்பெண் மாற்றம் உள்ள பதிவெண்கள் இன்று வெளியீடு

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தவர்களில், மதிப்பெண்களில் மாற்றமுள்ளோரின் பதிவெண் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்படுகிறது.

இதுகுறித்து தேர்வுத் துறை இயக்குநர் தண்.வசுந்தரா தேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:


கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்புத் தேர்வை 10,72,225 மாணவர்கள் தேர்வு எழுதினர்.

இதில் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த தேர்வர்களின் எண்ணிக்கை 9, 750 ஆகும். அதைத் தொடர்ந்து 22,356 விடைத்தாள்களில் மறுகூட்டல் செய்யப்பட்டது. இதில், மதிப்பெண் மறுகூட்டலில் மாற்றம் உள்ள விடைத்தாள்களின் எண்ணிக்கை 451 ஆகும்.

அதன்படி தேர்வர்களுக்கு மாற்றம் செய்யப்பட்ட மதிப்பெண்களை பதிந்து மதிப்பெண் சான்றிதழ் வழங்கிடும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது பதிவெண்கள் பட்டியல் www.tndge.in என்ற இணையதளத்தில் வியாழக்கிழமை (ஜூன் 30) பிற்பகல் வெளியிடப்படும். மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்து இந்தப் பட்டியலில் இடம்பெறாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில் மதிப்பெண்களில் எவ்வித மாற்றமும் இல்லை என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக