லேபிள்கள்

27.6.16

கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் கல்வி பயில ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு

கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் கல்வி பயில ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கால அவகாசம் இம்மாதம் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 


இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் திரு.கு.கோவிந்தராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: - சென்னை மாவட்டத்திலுள்ள கிண்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில்; ஆகஸ்ட் 2016 –க்கான சேர்க்கைக்கு கால அவகாசம் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் 8-ஆம் வகுப்பு மற்றும் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள்; அவரவர் வசிக்கும் இடத்திலிருந்தபடியே www.skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். 

மாதம் ரூ500/- உதவித்தொகையுடன் விலையில்லா சீருடைகள் காலணிகள் மிதிவண்டி லேப்டாப் வரைபட உபகரணங்கள் பாடபுத்தகங்கள் பேருந்து பயண அட்டை மற்றும் சலுகை கட்டணத்தில் இரயில் பயண அட்டை ஆகிய சலுகைகளுடன் முற்றிலும்; இலவசமான பயிற்சி பெற மாணவர்கள் 30.06.2016-க்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு சென்னை மாவட்ட ஆட்சியர் திரு.கு.கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக