சிதம்பரம் : அண்ணாமலை பல்கலைக் கழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான 'ரேண்டம்' எண்ணை,
பல்கலைக் கழக துணைவேந்தர் மணியன் வெளியிட்டார்.
பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில், நடப்பாண்டு, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான விண்ணப்பங்கள், கடந்த 20ம் தேதி வரை பெறப்பட்டது. மொத்தமுள்ள, 150 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு, 4,906 பேரும்; 80 பி.டி.எஸ்., இடங்களுக்கு, 1,079 பேரும் விண்ணப்பித்து உள்ளனர். இரு படிப்புகளுக்கும், ரேண்டம் எண் வழங்கப்பட்டு உள்ளது.
விண்ணப்பதாரர்கள், பல்கலைக் கழக இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
மாணவர்கள், பிளஸ் 2 தேர்வு அல்லது அதற்கு இணையான படிப்பில் பெற்ற மதிப்பெண், தமிழக அரசின் இடஒதுக்கீடு அடிப்படையில் பட்டியல் தயாரிக்கப்பட்டு, கலந்தாய்விற்கு அழைக்கப்படுவர்.மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சதவீதம், தமிழக அரசின் விதிப்படி ஒதுக்கப்படும். கலந்தாய்வு நாள், பின் அறிவிக்கப்படும்.
கலந்தாய்வு அட்டவணை மற்றும் கலந்தாய்விற்கான அனுமதி கடிதத்தை, பல்கலைக் கழக இணையதளத்தில், ஜூலை முதல் வாரம் பதிவிறக்கம் செய்து கொண்டு, கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும். கலந்தாய்விற்காக தனியாக கடிதம் அனுப்பப்பட மாட்டாது.இவ்வாறு துணைவேந்தர் மணியன் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக