அம்பாசமுத்திரம் அருகே, பல ஆயிரம் பேருக்கு கல்விக் கண் திறந்து வந்த 82 ஆண்டுகால பழமையான அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளிக்கூடம் மாணவர்கள் சேர்க்கை இல்லாததால் மூடப்படுகிறது.
பழமையான பள்ளிக்கூடம்
தமிழகத்தில் குக்கிராமங்கள் வரை பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. தனியார்கள் போட்டி போட்டுக் கொண்டு பள்ளிக் கூடங்களை திறந்து, வாகனங்கள் மூலம் பல கி.மீ. தொலைவில் இருந்து மாணவ, மாணவிகளை அழைத்துச் சென்று கல்வி கற்பித்து வருகிறார்கள்.
நெல்லை மாவட்டத்தில், அம்பாசமுத்திரத்தில் இருந்து சில கி.மீ. தொலைவில் உள்ள அடைய கருங்குளத்தில் தனியார் மூலம் 1934–ம் ஆண்டு இந்து நடுநிலைப்பள்ளிக்கூடம் தொடங்கப்பட்டது. அம்பாசமுத்திரம் பகுதியில் திறக்கப்பட்ட ஒருசில பள்ளிக்கூடங்களில் இதுவும் ஒன்று. இந்த பள்ளிக் கூடத்துக்கு 20–க்கும் மேற்பட்ட சுற்றுப்புறக் கிராமங்களில் இருந்து மாணவ, மாணவிகள் வந்து கல்வி கற்றுச் சென்றனர்.
மாணவர்கள் சேர்க்கை...
இந்த பள்ளிக்கூடம் அரசு உதவிபெறும் பள்ளிக்கூடமாக மாற்றப்பட்டது. இங்கு பணியாற்றிய ஆசிரியர்களுக்கு அரசு சம்பளம் மற்றும் சலுகைகள் கிடைத்து வந்தன. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்து பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் சேர்க்கை வெகுவாக குறைந்தது. இப்பகுதியில் பல தனியார் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன.
அரசு உதவிபெறும் பள்ளிக்கூடமாக இருந்ததால், தொடர்ந்து நடத்துவதற்கு பள்ளிக்கூட நிர்வாகத்தினரும், ஆசிரியர்களும் சுற்றுப் புறக் கிராமங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கு முயற்சி எடுத்து வந்தனர். இந்த நிலையில், பள்ளிக்கூடத்தில் பணியாற்றிய ஆசிரியர்கள் ஒவ்வொருவராக பணி ஓய்வு பெற்ற நிலையில், மாணவர்கள் சேர்க்கையும் வெகுவாக குறைந்தது.
2 மாணவர்களுடன்...
புதிய ஆசிரியர்களை நியமிக்க நிர்வாகம் எடுத்த முயற்சிக்கும் பலன் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்த பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியையாகவும், ஒரே ஆசிரியையாகவும் அருட்செல்வி செயல்பட்டு வந்தார். இந்த பள்ளிக் கூடத்தில் வெளி மாநிலத்தைச் சேர்ந்த 2 மாணவர்கள் மட்டும் படித்து வந்தனர். பள்ளிக்கூட கட்டிடமும் மிகவும் பழுதடைந்த நிலையில் இருக்கிறது.
காரணம் என்ன?
இதை தொடர்ந்து, இந்தப் பள்ளிக்கூடத்தை மூட உத்தரவிட வேண்டும் என பள்ளிக்கூட நிர்வாகம் சார்பில் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது ஐகோர்ட்டு விசாரணை நடத்தி மாவட்ட தொடக்க கல்வி அலுவலருக்கும், உதவி தொடக்க கல்வி அலுவலருக்கும் உத்தரவு பிறப்பித்திருப்பதாக, கல்லூரி நிர்வாகி முத்தையா தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், அந்த 2 அதிகாரிகளும் பள்ளிக்கூடத்துக்குச் சென்று ஆய்வு நடத்த வேண்டும். பழுதடைந்த பள்ளிக்கூடத்தில் படித்து வரும் 2 மாணவர்களையும் அருகில் உள்ள பள்ளிக்கூடத்தில் சேர்க்கவும், அங்கு பணியாற்றும் ஆசிரியைக்கு வேறொரு பள்ளிக்கூடத்தில் பணி இடமாற்றம் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே இந்தப் பள்ளிக்கூடத்தை நடத்துவதற்கு நாங்களும் பல்வேறு முயற்சிகள் எடுத்தோம். பெற்றோர்களும், மாணவர்களும் பள்ளிக்கூடத்தை புறக்கணித்ததாலும், பள்ளிக்கூட கட்டிடம் பழுதடைந்த நிலையில் இருப்பதாலும், மூடுவது நல்லது என முடிவு செய்துள்ளோம். அதிகாரிகளின் ஆய்வுக்குப் பின் பள்ளிக்கூடத்தை நிரந்தரமாக மூடுவது குறித்து முடிவு எடுக்கப்படும், என்றார்.
மூடப்படுகிறது
பஞ்சாயத்து தலைவரும், பள்ளிக்கூடத்தின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவருமான மதனகிருஷ்ணன் கூறுகையில், பல ஆயிரம் பேருக்கு கல்விக் கண் திறந்த பள்ளிக்கூடம் இது. பல ஆண்டுகளாக மாணவர்கள் சேர்க்கை இல்லாமல், ஆசிரியர்களும் இல்லாமல் பள்ளிக்கூடம் செயல்பட்டது. இதனால், அரசுக்கும் தேவையற்ற நிதியிழப்பும் ஏற்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கூடத்தை மூடுவதே நல்லது, என தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக