லேபிள்கள்

12.6.17

பாடப் புத்தகம் கிடைக்காமல் பிளஸ்1 மாணவர்கள் தவிப்பு

கோவை புறநகரில் உள்ள பள்ளிகளில் படிக்கும் பிளஸ்1 மாணவர்கள் புத்தகங்கள் கிடைக்காமல் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.


தமிழகத்தில், 7ம் தேதி முதல் பள்ளிகள் செயல்படத் துவங்கியுள்ளன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ்2 வரை பாடப்புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. மெட்ரிக் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், தனித்தேர்வு எழுதுவோர் உள்ளிட்டோர் புத்தகங்களை விலைக்கு வாங்குகின்றனர்.

இந்த ஆண்டு தமிழ்நாடு பாடநுால் கழகம், ஆன்லைன் மூலம் பதிவு செய்து பணம் செலுத்தி புத்தகம் பெறும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.பள்ளிகள் மொத்தமாக புத்தகம் பெற்றுக்கொள்ளலாம் அல்லது மாணவர் தனது சுயவிபரங்களை பதிவு செய்து,ஆன்லைன் முறையில் பணம் செலுத்தி புத்தகங்களை பெற்றுக் கொள்ளலாம்.அரசு அங்கீகாரம் பெற்ற புத்தக விற்பனையாளர்களுக்கு பிளஸ்1 புத்தகங்கள் வழங்கப்படவில்லை.


இதனால், மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.பெற்றோர்கள் கூறுகையில், 'பல மெட்ரிக் பள்ளி நிர்வாகத்தினர், பிளஸ்1 மாணவர்களை வெளியில் புத்தகம் வாங்கும்படி கூறுகின்றனர். கோவை புறநகரில் எங்கும் பிளஸ்1 புத்தகங்கள் விற்பனை இல்லை. ஆன்லைன் முறையில், ஒவ்வொரு மாணவனுக்கும் தனித்தனியாக பதிவு செய்து, புத்தகங்கள் பெறுவது சிரமமாக உள்ளது.பிளஸ்1 புத்தகங்கள் சுலபமாக வெளிமார்க்கெட்டில் கிடைக்க கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.kaninikkalvi.blogspot.in அங்கீகாரம் பெற்ற பாட புத்தக விற்பனையாளர்கள் கூறுகையில், 'விற்பனையாளர்களுக்கு பிளஸ்1 புத்தகங்கள் தருவதை நிறுத்தி விட்டனர். அரசு நிர்ணயித்த விலைக்கு தான் புத்தகங்களை விற்கிறோம்.

பாடநுால் கழகத்தில் வாங்கிய புத்தகங்கள் விற்பனையாகா விட்டால், இழப்பு எங்களுக்குத்தான். பாடநுால் கழகத்திற்கு பாதிப்பு இல்லை. ஏன் பிளஸ் 1 புத்தகங்கள் எங்களுக்கு தரவில்லை என தெரியவில்லை' என்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக