அரசு மற்றும் தனியார் கல்லுாரிகள், வரும், 16ல் திறக்கப்படுகின்றன. தமிழகத்தில் உள்ள, அரசு மற்றும் தனியார் பள்ளிகள், ஜூன், 7ல் திறக்கப்பட்டன.
பெரும்பாலான பள்ளிகளில் மாணவர் சேர்க்கை முடிந்து, நேற்று முதல், முழு வீச்சில் வகுப்புகள் துவங்கி உள்ளன. 'அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கலை, அறிவியல் கல்லுாரிகள், 16ல் திறக்கப்படும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.புதிய மாணவியரை, பூக்கள் துாவியும், ரோஜா பூ கொடுத்து வரவேற்கவும், மகளிர் கல்லுாரிகள் முடிவு செய்துள்ளன.
ஆண்கள் கல்லுாரியில் துவக்க நாளிலேயே, கல்லுாரி வளாகங்களில் 'ராகிங்' மற்றும் பஸ் கலாட்டாக்களை தவிர்க்கும் வகையில், ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.இதற்காக, கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. பேராசிரியர்கள், கல்லுாரி அதிகாரிகள் இடம் பெற்ற இந்த குழுவினர், வளாகங்களில், மாணவர்கள் கூட்டமாக கூடுவதை தடுக்கவும், 'ராகிங்' நடக்காமல் முன்னெச்சரிக்கை ரோந்து வரவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக