லேபிள்கள்

12.6.17

அரசு பள்ளிகளுக்கு இணையதளம் கல்வி மேம்பாட்டுக்கு திட்டம்

அரசு பள்ளிகளின் செயல்பாட்டை, பொதுமக்கள் அறியும் நோக்கில், பிரத்யேக இணையதளம் உருவாக்க, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 
பள்ளிக் கல்வித் துறையில், பல அதிரடி மாற்றங்கள் நடக்கின்றன. மத்திய அரசு நிதியில், 'ஸ்மார்ட் கிளாஸ் ரூம்' அமைக்கவும், கல்வித் துறை முனைப்பு காட்டி வருகிறது. அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டமான, ஆர்.எம்.எஸ்.ஏ., சார்பில், அரசு பள்ளிகளுக்கு பிரத்யேக இணைய தளம் உருவாக்கவும், உயர் கல்வி குறித்த வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தவும், நிதி ஒதுக்கி, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 

இதை சாதகமாக்கி, அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த, கல்வித் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். முதல் கட்டமாக, மாவட்ட வாரியாக உள்ள, பழமை வாய்ந்த, அதிக தேர்ச்சி விகிதம் கொண்ட பள்ளிகளுக்கு, முன்னுரிமை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

ஆர்.எம்.எஸ்.ஏ., உதவி திட்ட அலுவலர் ஒருவர் கூறியதாவது:

மத்திய அரசின் நிதியை முழுமையாக பயன்படுத்தி, அரசு பள்ளிகளை தரம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளி வாரியாக பிரத்யேக இணையதளம் உருவாக்கும் போது, கல்வி சார் செயல்பாடுகளை எளிதில் விளம்பரப்படுத்தலாம். மாணவர் சேர்க்கை அதிகரிக்கவும் இத்திட்டம் உதவி புரியும். 

மேலும், நலத்திட்ட பொருட்கள் வினியோகம், பொதுத் தேர்வு பட்டியல் தயாரிக்க, மாணவர்களின் விபரங்கள் திரட்டுவதிலும் சிக்கல் இருக்காது. இதற்கான முதற்கட்ட பணிகள், விரைவில் துவங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக