தமிழக சட்டப்பேரவையில் பேசிய சுற்றுலாத்துறை அமைச்சர் கருப்பணன் தேசிய பசுமைப்படை மாணவர்களுக்கு சூழல் போட்டிகள் நடத்தி சுற்றுலா அழைத்து செல்ல நிதி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
960 பள்ளிகளுக்கு மரக்கன்று நட்டு பராமரிக்க தலா ரூ.15 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் சுற்றுச்சூழல் மேம்பாட்டில் சிறந்து விளங்கும் நிறுவனங்களுக்கு ரூ.2 லட்சம் பசுமை விருது வழங்கப்படும் என்றும் அமைச்சர் கருப்பணன் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக