லேபிள்கள்

17.6.17

முதுநிலை ஆசிரியர் எழுத்து தேர்வுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு

 முதுநிலை ஆசிரியர் பணி, எழுத்து தேர்வுக்கான, ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்படுகிறது.

தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை -1 பணியிடங்களுக்கு, ஜூலை, 2ல் எழுத்து தேர்வு நடக்கிறது. இந்த தேர்வுக்கு, 2.18 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.


தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட், www.trb.nic.in என்ற இணையதளத்தில், இன்று காலை, 10:00 மணி முதல் பதிவிறக்கம் செய்யலாம். கடைசி நேர பதற்றத்தை தணிக்க, முன்கூட்டியே, ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் 
செய்து கொள்ள வேண்டும் என, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக