லேபிள்கள்

17.6.17

வேளாண் பல்கலை கலந்தாய்வு துவக்கம்

வேளாண் பல்கலை, இளநிலை மாணவர்களுக்கான கலந்தாய்வு நேற்று துவங்கியது. சிறப்பு பிரிவின் கீழ், பாடப்பிரிவை தேர்வு செய்த, 32 மாணவர்களுக்கு துணைவேந்தர் ராமசாமி, அதற்கான சான்றிதழ்களை வழங்கினார்.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலையின் கீழ், 14 உறுப்பு மற்றும் 21 இணைப்பு கல்லுாரிகள் உள்ளன. இதில், வேளாண்மை, தோட்டக்கலை, இளநிலை தொழில்நுட்ப படிப்புகள் என, 13 இளநிலை படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. நடப்பு கல்வியாண்டில், கலந்தாய்வின் மூலம், 2,820 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். விளையாட்டு, மாற்றுத்திறனாளி உள்ளிட்ட சிறப்பு பிரிவில், 32 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவ்விடங்களுக்கான கலந்தாய்வில், அழைப்பு கடிதம் பெற்ற, 75 மாணவர்கள் பங்கேற்றனர். இதில், தகுதியான, 32 பேர் பாடப்பிரிவுகளை தேர்வு செய்தனர்.

துணைவேந்தர் ராமசாமி கூறுகையில், ''சிறப்புப் பிரிவு கலந்தாய்வில், 32 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். பொது கலந்தாய்வு, 19ம் தேதி துவங்கவுள்ளது. முதல் நாள் கலந்தாய்வுக்கு, மூன்று பிரிவுகளில், 750 பேருக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது,'' என்றார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக