நிகர்நிலை பல்கலையாக செயல்பட தகுதியற்றவை என கூறப்பட்ட, 44 பல்கலைக்கழகங்களில், மீண்டும் ஆய்வு நடத்த, பல்கலை மானிய கமிஷனுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும், நிகர்நிலை அந்தஸ்து வழங்கப்பட்ட, 126 பல்கலைகள், அதற்கான தகுதியுடன் செயல்படுகின்றனவா என்பதை ஆய்வு செய்ய, டாண்டன் கமிட்டியை, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம், 2009ல் அமைத்தது. இந்த கமிட்டி, 126 பல்கலைகளில் ஆய்வு செய்து, 44 பல்கலைகள், நிகர்நிலை பல்கலையாகச் செயல்பட தகுதியற்றவை என, தெரிவித்தது. மேலும், 44 பல்கலைகளில் பல குறைபாடுகள் உள்ளதாக தெரிவித்தது. தகுதியற்றவை என கூறப்பட்ட, 44 பல்கலைகளுக்கு வழங்கப்பட்ட, நிகர்நிலை அந்தஸ்தை ரத்து செய்யும்படி, டாண்டன் கமிட்டி பரிந்துரைத்தது.
இதை எதிர்த்து சில பல்கலைகள், கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இப்போது, இந்த வழக்குகள் விசாரணையில் உள்ளன.இந்நிலையில், டாண்டன் கமிட்டி, தகுதியற்றவை என அறிவித்த, 44 பல்கலைகளிலும் மீண்டும் ஆய்வு நடத்த, யு.ஜி.சி., எனப்படும், பல்கலை மானிய குழுவுக்கு, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக