லேபிள்கள்

12.6.17

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் செப்டம்பர் இறுதி வரை மாணவர் சேர்க்கை

நடப்பு கல்வி ஆண்டில் செப்டம்பர் வரை அரசுப்பள்ளிகளில் முதல் வகுப்பில் மாணவர் சேர்க்கையை நடத்த பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
|தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை ஊக்குவிக்க பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எல்லா அரசு தொடக்கப்பள்ளிகளிலும் ஆங்கில வழிக்கல்வியை தொடங்குதல், அரசு ஆசிரியர், ஊழியர்களது பிள்ளைகளை அரசுப்பள்ளிகளில் சேர்க்க ஊக்குவித்தல் என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆலோசித்து வருகிறது. அதற்கேற்ப அரசு தொடக்கப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க ஆட்டோக்கள் மூலம் தீவிர பிரசாரத்தை மேற்கொள்ளவும், விழிப்புணர்வு பேரணிகளை நடத்தவும் உத்தரவிட்டுள்ளது.

இதன் மூலம் அரசுப்பள்ளிகளில் உள்ள கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர்கள் எண்ணிக்கை, அளிக்கப்படும் சலுகைகள் என பலவும் பொதுமக்கள் மத்தியில் எடுத்துக்கூறப்படுகிறது.kaninikkalvi.blogspot.in அதேபோல் செப்டம்பர் மாதம் விஜயதசமியன்றே தமிழகத்தில் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை பள்ளிகளில் சேர்க்க விரும்புவார்கள் என்பதால் அம்மாதம் இறுதி வரை அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் முதல் வகுப்பில் மாணவர் சேர்க்கையை தொடர்ந்து நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக