லேபிள்கள்

11.2.14

தமிழக அரசின் கவனத்தை ஈர்க்க 13ம் தேதி ஆசிரியர்கள் போராட்டம்

தமிழக அரசின் கவனத்தை ஈர்க்க தமிழகத்தில் உள்ள உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம். கள்ளர் பள்ளி பட்டதாரி
ஆசிரியர் கழகம் சார்பில் மாவட்ட செய லாளர் பிரபாகரன், வட்ட செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில்,“ சமூக நீதி க்கு எதிராக தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். கடந்த 2004 முதல் 2006  வரை பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு பணிவரன் முறை செய்ய வேண்டும். 10ம் மற் றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான நேரத்தை மாற்றி இருப்பதை ரத்து செய்து பழைய முறைப்படி 10 மணிக்கு துவங்க வேண்டும் என தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வரும் 13ம் தேதி அனைத்து மாவட்ட சிஇஓ அலுவலம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. மதுரையில் நடை பெறும் போராட்டத்திற்கு மாநில செயலாளர் அன்பழகன் கலந்து கொள்ள உள்ளார் என்று தெரிவித்துள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக