2014-15-ம் கல்வியாண்டுக்கு அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவியில் நியமனம் பெறத் தகுதி வாய்ந்தோர் பட்டியல் தயார்
செய்ய 01.01.2014 நிலவரப்படி தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியின் கீழ் அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் காலிப் பணியிடங்களை, பணி மாறுதல் மூலம் நியமனம் செய்யும் பொருட்டு அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவிக்குத் தகுதி வாய்ந்த பட்டதாரி ஆசிரியர், அதனையொத்த பணிநிலையில் உள்ள ஆசிரியர்கள் மற்றும், பட்டதாரி ஆசிரியர் பதவியிலிருந்து பணிமாறுதல் மூலம் பதவி உயர்வு பெற்று முதுகலை ஆசிரியர்களாகப் பணிபுரியும் பின்வரும் ஆசிரியர்கள் சார்பான விவரங்களை இணைப்பில் உள்ள படிவத்தில் அனுப்ப கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
செய்ய 01.01.2014 நிலவரப்படி தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியின் கீழ் அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் காலிப் பணியிடங்களை, பணி மாறுதல் மூலம் நியமனம் செய்யும் பொருட்டு அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவிக்குத் தகுதி வாய்ந்த பட்டதாரி ஆசிரியர், அதனையொத்த பணிநிலையில் உள்ள ஆசிரியர்கள் மற்றும், பட்டதாரி ஆசிரியர் பதவியிலிருந்து பணிமாறுதல் மூலம் பதவி உயர்வு பெற்று முதுகலை ஆசிரியர்களாகப் பணிபுரியும் பின்வரும் ஆசிரியர்கள் சார்பான விவரங்களை இணைப்பில் உள்ள படிவத்தில் அனுப்ப கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
1 அரசு உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியராக ஏற்கனவே பணி நியமனம் வழங்கப்பட்டு அதனைத் தற்காலிகமாக மூன்று ஆண்டுகளுக்கு உரிமைவிடல் செய்தவர்களுள், தற்காலிகப் உரிமைவிடல் செய்த நாளிலிருந்து 31.12.2013
அன்று மூன்று ஆண்டுகாலம் முடித்தவர்கள்.
2 1985-86ஆம் ஆண்டு வரை அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தெரிவு செய்யப்பட்டவர்கள்.
3 தேர்வாணையம் மூலம் தெரிவு செய்யப்படாமல், வேலைவாய்ப்பகம் மூலம் முற்றிலும் தற்காலிக அடிப்படையில் பணிநியமனம் செய்யப்பட்டு, அரசாணை எண்.1325 நாள் 03.08.88-ன் படியும், மற்றும் அரசாணை எண்.125,367,390
ஆகியவற்றின் மூலம் முன்தேதியிட்டு பணிவரன் முறைபடுத்தப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள்/மொழியாசிரியர்கள் ஆகியோர்களுள் விடுபட்ட ஆசிரியர்கள்.
4 ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பட்டதாரி ஆசிரியர்களாக (மொழி ஆசிரியர்கள் உட்பட) 2000-2001ஆம் ஆண்டு வரை தெரிவு செய்யப்பட்டு, நியமனம் பெற்ற ஆசிரியர்களுள் தரம் எண்1020 வரை இடம் பெற்றவர்கள்.
5 பதவி உயர்வு மூலம் பட்டதாரி ஆசிரியர் தரத்தில் 31.12.2000
வரையில் நியமனம் பெற்று பணியாற்றிவரும் ஆசிரியர்கள்.
6 அரசுப் பள்ளிகளில் 31.12.2000
வரையில் பதவி உயர்வு மூலம் நியமனம் பெற்றுப் பணிபுரிந்துவரும் பட்டதாரி தமிழாசிரியர்கள் பி.எட்.
31.12.2013க்குள் தேர்ச்சி பெற்றவர்கள்மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை ஐஐ ஆகியோருள் 31.12.2008க்குள் பி.ட்டி/பி.எட் பட்டம் பெற்றவர்கள்.
7 மாநகராட்சி / ஊராட்சி ஒன்றிய பள்ளிகளிலிருந்து அலகு விட்டு அலகு மாறுதலில் வந்தவர்கள் / ஈர்த்துக் கொள்ளப்பட்டவர்கள் மற்றும் வேறு துறைப் பள்ளிகளிலிருந்து துறை மாறுதலில் அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணியில் சேர்ந்தவர்கள் சார்பில் பள்ளிக் கல்வித்துறையில் 31.12.2000
வரையில் ஈர்த்துக்கொள்ளப்பட்டவர்கள் / பணியில் சேர்ந்தவர்கள்.
8 மேற்கண்ட வகை பட்டதாரி ஆசிரியர்களில், தற்போது முதுகலை ஆசிரியராகப் பணிமாறுதலில் பதவி உயர்வு பெற்றுப் பணிபுரிந்து வருபவர்கள்.
9 உடற்கல்வி இயக்குநர் நிலை 2–லிருந்து உடற்கல்வி இயக்குநர் நிலை-1 பதவி உயர்வு பெற்றவர்களுள் 31.12.2008
க்குள் பி.எட். பட்டம் தேர்ச்சி பெற்றவர்கள்.
மேற்காணும் வகை ஆசிரியர்கள் சார்பாக விவரங்கள் அனுப்புகையில் கீழ்காணும் விவரங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
1) அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் தெரிவு செய்யப்பட்டவர்கள் சார்பாக விவரங்கள் அளிக்கையில் தேர்வாணையம் மூலம் தெரிவு செய்யப்பட்ட ஆண்டு மற்றும் தர எண் தவறாமல் குறிப்பிடப்பட வேண்டும். தர எண் மற்றும் ஆண்டிற்கான ஆதாரங்கள் இணைக்கப்பட வேண்டும்.
2) பி.டி / பி.எட். பட்டம் பெற்றிராத பட்டதாரி தமிழாசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் நிலையில் உள்ள பிறவகை ஆசிரியர்களின் பெயர்களை எக்காரணத்தை முன்னிட்டும் பரிந்துரை செய்யக்கூடாது.
3) பள்ளி மற்றும் பட்டப்படிப்பில் தமிழ் மொழி பயிலாத ஆசிரியர்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் தமிழ் இரண்டாம் மொழித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே அவர்களது பெயர்களை பட்டியலில் சேர்க்க வேண்டும். எஸ்.எஸ்.எல்.சி தமிழ் பாடத்தை தனித்தேர்வராக எழுதி தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் பெயரை பரிந்துரை செய்யக்கூடாது.
4) பணியாளர்களின் பிறந்த தேதி, நியமனதேதி, கடந்த 5 ஆண்டுகளில் தண்டனை ஏதும் பெற்றிருப்பின் அதன் விவரம் நகல் மற்றும் தமிழ்நாடு குடிமைப்பணி (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகளில் விதி, 17(பி)ன் கீழ் ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் இருப்பின் அதன் முழுவிவரம் போன்றவற்றை சரியாக உறுதி செய்து அளித்தல் வேண்டும்.
5) ஏற்கனவே அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கப்பட்டு, அப்பதவி உயர்வை நிரந்தரமாகத் துறப்பு செய்தவர்களின் பெயர்களை எக்காரணத்தைக் கொண்டும் பரிந்துரை செய்யக் கூடாது.
6) நேரடியாக முதுகலை ஆசிரியர்களாக பணிநியமனம் பெற்றவர்கள் பெயர்களையும் எக்காரணத்தைக் கொண்டும் பரிந்துரை செய்யக் கூடாது.
7) உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவிக்கு பணிமாறுதலில் பதவி உயர்வு அளித்து நியமனம் செய்யப் பரிந்துரை செய்யப்படும் அனைத்து ஆசிரியர்களும் கீழ்க் குறிப்பிட்ட தேர்வுகளில் கண்டிப்பாகத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். டிசம்பர் 2013-ல் துறை தேர்வு எழுதியுள்ளவர்களின் பெயர்களை எக்காரணம் கொண்டும் பட்டியலில் சேர்க்க கூடாது.
அ) நிர்வாக அலுவலருக்கான கணக்குத் தேர்வு (அல்லது) சார்நிலை அலுவலர்களுக்கான கணக்குத் தேர்வு பாகம்- 1
ஆ) மாவட்ட அலுவலக நடைமுறை நூல் தேர்வு (தற்போது தமிழ்நாடு அரசு அலுவலக நடைமுறை நூல் தேர்வு)
8) மாநகராட்சி / ஊராட்சி ஒன்றிய பள்ளிகளிலிருந்து அலகு விட்டு அலகு மாறுதலில் வந்தவர்கள் / ஈர்த்துக் கொள்ளப்பட்டவர்கள் மற்றும் வேறு துறைப் பள்ளிகளிலிருந்து துறை மாறுதலில் அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணியில் சேர்ந்தவர்கள் சார்பில் பள்ளிக் கல்வித்துறையில் ஈர்த்துக்கொள்ளப்பட்ட நாள் / பணியில் சேர்ந்த நாள் ஆதாரத்துடன் குறிப்பிடப்பட வேண்டும்.
9) பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களின் பணிவரன்முறை நாள் மற்றும் தகுதிக்காண்பருவம் முடித்த நாள் பற்றிய விவரங்களை பணிப்பதிவேட்டின் அடிப்படையில் உறுதி செய்யவேண்டும். பணிவரன்முறை நாள் தெளிவாகக் (முற்பகல் / பிற்பகல்) குறிப்பிடப்படவேண்டும்.
10) ஏற்கனவே பட்டதாரி ஆசிரியர் ஆசிரியராகப் பணியாற்றி தற்போது முதுகலை ஆசிரியராகப் பணியாற்றுபவர்கள் சார்பில் பட்டதாரி ஆசிரியர் நிலையில் அவர்களது முதுநிலையைக் கணக்கில் கொள்ள வேண்டும்.
11) மேலே வரிசை எண்.1 முதல் 11 முடிய குறிப்பிட்டுள்ள அனைத்து வகை ஆசிரியர்கள் தற்போது பதவி உயர்வு மூலம் முதுகலை ஆசிரியர்களாகப் பணியாற்றி வந்தாலும் அவர்களது பெயர்களை தகுதியிருப்பின், பரிந்துரை செய்ய வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக