தமிழகத்தில் வரும் 2016-17-ஆம் நிதியாண்டில் ஏழாவது ஊதியக்
குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வியாழக்கிழமை தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 2014-15-ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் ஊதியம்
குறித்த ஒதுக்கீடு ரூ. 35,720.86 கோடி மற்றும் ஓய்வூதியம் குறித்த செலவினத்துக்கான
ஒதுக்கீடு ரூ. 16,020.63 கோடியாகும்.
அகவிலைப்படி உயர்வு, சம்பள உயர்வு மற்றும் காலிப் பணியிடங்களை
நிரப்புவதால் ஏற்படும் கூடுதல் செலவு ஆகியவற்றின் காரணமாக, 2015-16, 2016-17-ஆம்
ஆண்டுகளில் இந்த வளர்ச்சி விகிதம் முறையே 14.62 மற்றும் 20 சதவீதமாக இருக்கும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
2016-17-ஆம் ஆண்டு முதல் 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள்
நடைமுறைப்படுத்தப்படும் என கருதப்பட்டுள்ளது. முந்தைய ஊதியக் குழுக்கள் போலன்றி,
இந்த குழுவின் பரிந்துரைகள் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் பிந்தைய
ஆண்டுகளில் தவணைகளில் நிலுவைத் தொகை வழங்க வேண்டிய நிலை எழாது எனவும்
கருதப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக