லேபிள்கள்

12.2.14

புதிய தாலுகாக்கள் இன்று உதயம்: பணியிட நியமனம் சிக்கல்

தமிழகம் முழுவதும், 23 புதிய தாலுகாக்களை, முதல்வர், ஜெயலலிதா, இன்று, திறந்து வைக்கிறார். கடந்த, 2013 சட்டசபை கூட்டத்தொடரில்,
புதிய தாலுகாக்கள் பிரிப்பு தொடர்பான அறிவிப்பை, முதல்வர், ஜெயலலிதா வெளியிட்டார். தற்போது, சேலம், வேலூர், திருநெல்வேலி, புதுக்கோட்டை, சென்னை உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில், 23 தாலுகாக்கள் மற்றும் ஒரு வருவாய் கோட்டத்தை, 'வீடியோ கான்பரன்சிங்' மூலம், முதல்வர் ஜெ., இன்று காலை, 11:00 மணிக்கு, திறந்து வைக்கிறார். ஒரு தாலுகாவில், ரெகுலர், தேர்தல், சமூக பாதுகாப்பு திட்டம், வழங்கல் என, நான்கு தாசில்தார் பணியிடமும், தலைமையிட துணை தாசில்தார், துணை தாசில்தார், உதவியாளர் உட்பட, 10 பணியிடமும் நிரப்பப்பட வேண்டும். ஏராளமான பணியிடம் காலியாக உள்ளன. அதனால், புதிய பணியிடங்களை நிரப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக