லேபிள்கள்

12.2.14

மாற்றுத் திறனாளிகளின் நிரப்பப்படாத பணியிடங்கள் மற்றும் பதவிகள் தொடர்பான தகவல்களை அளிக்காதது குறித்து விளக்கம் அளிக்குமாறு தலைமைச்செயலருக்கு நோட்டீஸ்.

அரசின் பல்வேறு துறைகளில் மாற்றுத் திறனாளிகளின் நிரப்பப்படாத பணியிடங்கள் மற்றும் பதவிகள் தொடர்பான தகவல்களை அரசு
அதிகாரிகள்அளிக்காதது குறித்து விளக்கம் அளிக்குமாறு தலைமைச்செயலருக்கு  நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு பணிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு தொடர்பாகநீதிபதி எஸ்.மணிக்குமார் பிறப்பித்த உத்தரவு: 
அரசுத் துறை பணியிடங்களில்மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு சட்டப்படி வழங்கவேண்டும். இது தொடர்பாக உச்சநீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2012-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27-ஆம் தேதி, அரசு துறைகள், பொதுத்துறைகள், அரசுநிர்வகிக்கும்நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கானபதவி,பணியிடங்களை கண்டறிந்து நிரப்புவதற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.அந்தப் பணியிடங்களை கண்டறிவதற்கு கால அவகாசம் வேண்டும் எனஅரசு தரப்பில் கோரப்பட்டது. அதன் பிறகு, இந்தப் பணியிடங்களை கண்டறிவதற்காக மேலும் கால அவகாசம் கோரப்பட்டது. இந்த நிலையில் 34 செயலக தலைவர்கள், 140 துறை தலைவர்கள், 102 அரசு பொதுத்துறை பணியிடங்கள், 54 அரசு நிறுவனங்களில் பதவிகள் ஏ, பி,சி மற்றும் டி பிரிவுகளில் கண்டறியப்பட்டன என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.ஆனால், இதற்கான எந்த ஒரு தெளிவான தகவலும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. அரசு நிர்வகிக்கும் 54 நிறுவனங்கள் தொடர்பான தகவல்கள் வழங்கப்படவில்லை. 

அதனால், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம்பிறப்பித்த உத்தரவுகளை அரசு அதிகாரிகள் முறையாகப் பின்பற்றவில்லை.அதனால் தலைமைச் செயலர் ஷீலா பாலகிருஷ்ணன், மாற்றுத்திறனாளிகள்நலத்துறைச்செயலர் பி.சிவசங்கரன், ஆணையர் மணிவண்ணன் ஆகியோர்மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது? எனவே,இது தொடர்பாக விளக்கம் அளிப்பதற்கு அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பஉத்தரவிடப்படுகிறது. இதற்கான நோட்டீஸ பதிவுத்துறை அனுப்பவேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக