லேபிள்கள்

11.2.14

முதுகலை ஆசிரியர் நியமனத்தேர்வு விரைந்து பணி நியமனம் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் நேரில் முறையீடு

முதுகலை ஆசிரியர்தேர்வில் வெற்றி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொண்டு பணி நியமன ஆணைக்காக காத்திருக்கும் பலர் நேற்று
(10.02.2014) ஆசிரியர் தேர்வு வாரிய உயர் அதிகாரிகளை நேரில் சந்தித்தனர். சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து பலநாட்களாகியும் இறுதிப்பட்டியல் வெளியிடாததால் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை எடுத்துக்கூறி விரைந்து அதனை வெளியிட்டு பணி நியமன ஆணை வழங்கவேண்டும் எனகோரிக்கை வைத்தனர்.


சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளதால்,முதுகலை ஆசிரியர் தேர்வு இறுதிப்பட்டியல் வெளியிடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறிய அதிகாரிகள் அவ்வழக்குகளின் முடிவுக்கு பின்னரே இறுதிப்பட்டியல் வெளிவருவதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய நிலையில் இறுதிப்பட்டியல் வெளியிடுவது தாமதமாகக்கூடும் எனத் தெரிகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக