பிளஸ் 2 பொதுத் தேர்வை, தனி தேர்வாக எழுத விண்ணப்பிக்க தவறிய மாணவ, மாணவியர், 'தத்கால்' திட்டத்தின் கீழ், இம்மாதம், 17 முதல் 19 வரை, தேர்வுத் துறை அமைத்துள்ள சிறப்பு மையங்கள் மூலம், இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். தனி தேர்வர் வசதிக்காக, ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திலும், ஒரு சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
தேர்வர்கள், தங்களது மாவட்டத்தில் உள்ள மையத்திற்கு, நேரில் சென்றும், இணையதளம் வழியாகவும், விண்ணப்பிக்கலாம். தனியார் இணையதள மையங்களில், விண்ணப்பிக்கக் கூடாது. மாவட்ட வாரியான, சிறப்பு மையங்கள் விவரங்களை, www.tndge.in என்ற, தேர்வுத் துறை இணையதளத்தில் பார்க்கலாம். தேர்வு கட்டணத்துடன், சிறப்பு கட்டணமாக, 1,000 ரூபாய் சேர்த்து, செலுத்த வேண்டும். இந்த மாணவர்களுக்கான, 'ஹால் டிக்கெட்' இணையதளத்தில் வெளியிடப்படும்; இதன் தேதி, பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு, அறிவிக்கப்பட்டு உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக