லேபிள்கள்

18.12.14

அந்தந்த பள்ளிகளிலேயே 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு: வழக்கு தனிநீதிபதிக்கு மாற்றம்

பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளை அந்தந்த பள்ளிகளில் நடத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தொடரப்பட்ட வழக்கு தனி நீதிபதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
திருநெல்வேலி பெருமாள்புரத்தைச் சேர்ந்த ர‌ஜேந்திரன் என்பவர் தாக்கல் செய்த மனு,நீதிபதி தனபாலன் மற்றும் வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. 

அதில், பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளை அந்தந்த பள்ளிகளில் நடத்தாமல் அருகில் உள்ள பள்ளிகளில் நடத்துவதால் தேர்வு நேரங்களில் மாணவ, மாணவிகள் மன உளைச்சலுக்கு ஆளாவதாக குறிப்பிட்டிருந்தார். மேலும், வேறு பள்ளிக்கு மாணவ, மாணவிகள் செல்வதால் சாலை விபத்துக்கள் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் மனுவை தனி நீதிபதிக்கு மாற்றி உத்தரவிட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக