இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 86-வது பிரிவில் "6-14 வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி அவர்களுடைய அடிப்படை உரிமை" என்று கூறப்பட்டுள்ளது.
இதை நிறைவேற்றும் வகையில் குறிப்பிட்ட கால வரையரைக்குள் இந்திய அரசு தனது முதன்மையான திட்டமாகிய "சர்வ சிக்ஷா அபியான்” (எல்லோருக்கும் கல்வி) என்ற திட்டத்தின்மூலம் ஆரம்பக்கல்வியை அனைவருக்கும் அளிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.அனைத்து மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்படும் சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள 11 லட்சம் கிராமங்களைச் சேர்ந்த சுமார் 20 கோடி குழந்தைகளின் கல்வித்தேவைகள் நிறைவு செய்யப்படும்என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.பள்ளிக்கூட வசதியற்ற இடங்களில் புதிய பள்ளிக்கூடங்களை ஏற்படுத்துதல். பள்ளிக்கூடம் இருக்கும் இடங்களில் கூடுதல் வகுப்பறைகள், கழிப்பறைகள், குடிநீர், பராமரிப்பு நிதி உதவி ஆகியவற்றை அளித்து பள்ளி மேம்பாட்டிற்கும் நிதி வழங்குதல்.ஆசிரியர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கும் பள்ளிகளில் கூடுதலாக ஆசிரியர்களை நியமித்தல் மற்றும் ஏற்கனவே உள்ள ஆசிரியர்களின் திறனை அதிகரிக்கும் விதமாக அவர்களுக்கு அனைத்துத் துறைகளிலும் பயிற்சி அளித்தல், பெண்கள் மற்றும் சிறப்புத் தேவைகள் தேவைப்படும் குழந்தைகளின் கல்விக்கு முன்னுரிமை அளித்தல், நகர மற்றும் கிராமப்புறக் கல்வித்திட்ட இடைவெளியைக் குறைக்கும் வண்ணம் கம்ப்யூட்டர் கல்வியைப் பாடத்திட்டத்தில் சேர்த்துக் கொள்ளுதல் போன்றவை இந்ததிட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.
இதற்கான செலவினங்களில் மத்திய அரசு 85 சதவீத தொகையையும், மாநில அரசு 15 சதவீத தொகையும் பகிர்ந்துக் கொள்ளும்.இந்த திட்டத்துக்காக மத்திய-மாநில அரசுகள் ஒதுக்கீடு செய்த நிதியில் இருந்து ஆசிரியர்கள், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் மாற்றுத் திறனாளி மாணவ-மாணவிகளுக்கு ரொக்க மானியத் தொகையும் வழங்கப்படுகின்றது. இந்த நிதி மாவட்ட கல்வி அதிகாரியின் மேற்பார்வையில் அம்மாவட்டத்துக்குட்பட்ட மாநில அரசுமற்றும் உள்ளாட்சி அமைப்புகளை சேர்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.இவ்வகையில், மேற்கு வங்காள மாநிலம், பர்த்வான் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும் மானியத் தொகை அனுப்பி வைக்கப்பட்டது. இங்குள்ள ஜமால்பூர் பகுதியை சேர்ந்த பஞ்ச்ரா சாகர் சந்திரா ரக்ஷித் ஸ்மிர்தி பள்ளிக்கு அனுப்பி வைத்த தொகையில் இருந்து அப்பள்ளியின் தலைமை ஆசிரியரான பைஷாலா சந்திரா ராய் என்பவர் சுமார் 7 லட்சம் ரூபாயை கையாடல் செய்து விட்டதாக பர்த்வான் மாவட்ட மாஜிஸ்திரேட்டின் நேரடி கண்காணிப்பில் உள்ள சர்வ சிக்ஷா அபியான் கண்காணிப்பகத்துக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து, நடத்தப்பட்ட விசாரணையில் முறைகேடுகள் நடைபெற்றது உறுதி செய்யப்பட்டதால் தலைமை ஆசிரியர் பைஷாலா சந்திரா ராயை நேற்றிரவு போலீசார் கைது செய்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக