லேபிள்கள்

20.12.14

தமிழகத்தில் பிளஸ் 2 அரசு பொது தேர்வில் தட்டச்சு பாடம் செய்முறைத் தேர்வு பாடமாக மாற்றம்

தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநில பொதுச் செயலாளர் ஜனார்த்தனன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:– தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தொழிற்கல்வி பாடமான தட்டச்சுப் பாடம் கடந்த 1978–1979 ஆம் கல்வியாண்டு முதல் எழுத்துப் பாடமாக இருந்தது.
தற்போது மார்ச் 2015ல் நடைபெற உள்ள அரசு பொதுத் தேர்வில் தட்டச்சு பாடத்தை செய்முறை பாடமாக மாற்றி பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் சபீதா உத்தரவிட்டுள்ளார் மாணவர்களின் நலன் கருதி பாடங்களில் மாற்றம் செய்துள்ளதற்கு தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது. மேலும் இந்த பாடமானது தட்டெழுத்தும் கணிப்பொறி இயக்க முறையும் என்ற பெயரில் உள்ளது. எனவே கணிப்பொறி இயக்கம் குறித்து ஆசிரியர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக