பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு ஏற்கெனவே விண்ணப்பிக்கத் தவறிய தனித் தேர்வர்கள் டிசம்பர் 22 முதல் 24 வரை விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. ஒவ்வொரு கல்வி
மாவட்டத்திலும் அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுத் துறை சேவை மையங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இந்த மையங்கள் குறித்த விவரங்களை www.tndge.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.
தேர்வுக் கட்டணம் ரூ.125-இல் இணையதளப் பதிவுக் கட்டணமாக ரூ.50 செலுத்த வேண்டும். பார்வையற்றோருக்கு இந்தக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
அறிவியல் செய்முறைப் பயிற்சி வகுப்புக்குப் பதிவு செய்த தனித் தேர்வர்கள், அதுதொடர்பான சான்றிதழைச் சமர்ப்பித்தால் மட்டுமே தேர்வுக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவர் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக