லேபிள்கள்

16.12.14

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு: அனுமதிச் சீட்டைப் பதிவிறக்கம் செய்யலாம்

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வுக்கான தேர்வுக்கூடஅனுமதிச் சீட்டை விண்ணப்பதாரர்கள் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்திலிருந்து இந்த அனுமதிச் சீட்டுகளை விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்யலாம்.

Direct Recruitment of Post Graduate Assistants for the year 2013-2014 and 2014-2015 - Click here to Download the Hall Ticket

விண்ணப்பங்களில் பிழைகள் இருந்தாலும், விண்ணப்பித்த அனைவருக்கும் அனுமதிச் சீட்டுகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பத்தை ஏற்பது ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இறுதி முடிவுக்குட்பட்டது என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 1,807 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பாணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. இந்தப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு ஜனவரி 10-ஆம் தேதி நடைபெற உள்ளது.இந்தத் தேர்வுக்கு சுமார் 2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக