கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 3ஆம் மொழிப்பாடத்திற்கு நடப்பு கல்வியாண்டில் தேர்வு நடத்தப்படாது என்ற மத்திய அரசின் உறுதிமொழியை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.
3ஆம் மொழிப்பாடமாக ஜெர்மன் மொழிக்குப் பதிலாக சமஸ்கிருதம் அல்லது வேறு இந்திய மொழியை கற்கலாம் என அண்மையில் மத்திய அரசு அறிவித்திருந்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் உறுதிமொழியை ஏற்பதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
கேந்திரிய வித்யாலயா மாணவர்கள், நடப்பு கல்வியாண்டில் விருப்பப்பாடமாக ஜெர்மன் மொழி தேர்வை எழுதிக் கொள்ளலாம் என நீதிபதிகள் குறிப்பிட்டனர். ஜெர்மன் அல்லது வேறு மொழியை இனி விருப்பப்பாடமாக கற்கலாம் என கூறிய உச்சநீதிமன்ற நீதிபதிகள், சமஸ்கிருதம் அல்லது வேறு இந்திய மொழிதேர்வை அடுத்த ஆண்டு முதல் எழுதிக் கொள்ளலாம் என்றும் தீர்ப்பளித்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக